Thursday, August 8, 2013

Acchodha saras


एकदा तु तत्रस्थ एवेन्द्रायुधमारुह्य, मृगयानिर्गत: । शैलशिखरादवतीर्णं यदृच्छया किन्नरमिथुनमद्राक्षीत् ।
कृतग्रहणाभिलाषश्च तत्पलायमानं सुदूरमनुससार ।
एकदा तु तत्रस्थ एव-इन्द्रायुधम्-आरुह्य, मृगयानिर्गत:, शैलशिखराद् अवतीर्णं यदृच्छया किन्नरमिथुनम्-अद्राक्षीत्  कृतग्रहण-अभिलाषश्च तत्-पलायमानं सुदूरम्-अनुससार
ஒரு சமயம் அங்கு இருந்த போது, இந்திராயுதத்தின் மீதேறி, வேட்டையாடச் சென்றான். அப்போது எதேர்ச்சையாக கின்னர ஜோடி ஒன்று, மலைச் சிகரத்திலிருந்து இறங்குவதைக் கண்டான்.  அதைப் பிடிக்கும் ஆசையினால், அதைத் துரத்திக்கொண்டு வெகு தூரம் சென்று விட்டான். 
Once during his stay there, Chandrapida mounted Indrayudha and went out hunting.  He saw accidentally a Kinnara couple, getting down from the summit of a mountain.  Wishing to catch them, he chased them, too far, even as they were running away. 
तच्छानुबध्यमानं किंनरमिथुनं संमुखापतितमचलतुङ्गशिखरमारुरोह ।
இவ்வாறாக துரத்தப்பட்ட கின்னரமிதுனங்கள், அதற்கு முன்பாக இருந்த மலைச் சிகரத்தின் மீது ஏறியது.  
The Kinnara couple thus chased, ascended the high peak of a mountain that lay before it. 
आरूढे च तस्मिन्, तदनुसारिणीं निवर्त्य दृष्टिम्, स्वयमेव विहस्याचिन्तयम् - "किमिति निरर्थकमयमात्मा मया शिशुनेव आयासित:!  
அது மேலே ஏறியவுடன், தன் பார்வையை அவற்றின் மீது இருந்து அகற்றிவிட்டு, தனக்குத் தானே சிரித்துக் கொண்டு, கூறிக்கொண்டான், "என்னது இது, அர்த்தமில்லாத காரியம், குழந்தை போன்ற முயற்சி.    
When the couple had got up, Chandrapida withdrew his eyes that followed them, laughed within himself and reflected thus:  “why did I strain myself unnecassarily, like a child? 
किमनेन गृहीतेन, अगृहीतेन वा किंनरमिथुनेन प्रयोजनम् ?   
என்ன, அவற்றைப் பிடித்தாலென்ன பிடிக்காவிட்டாலென்ன, கின்னரமிதுனத்தினால் என்ன பிரயோஜனம்?
What if I catch it or do not catch it, what is the use of these Kinnara midunaas?
अहो मे मूखताया: प्रकार: !  न चागच्छता मया महावनेऽस्मिन्पन्था निरूपित:, येन प्रतिनिवृत्य गच्छामि ।    
ஐயோ! நான் மூர்க்கன் போலாகிவிட்டேனே! வரும்போது, இந்தப் பெரிய காட்டின் வழியை என்னால் ஞாபகத்தில் வைக்க முடியவில்லையே.  எப்படி திரும்பிப் போகப் போகிறேன். 
तदिदानीं स्वयमेवोत्प्रेक्ष्य दक्षिणामाशामङ्गीकृत्य गन्तव्यम् । आत्मकृतानां हि दोषाणां नियतमनुभवितव्यं फलमात्मनैव" इत्यवर्धाय, तुरंगमं व्यावर्तयामास ॥ 
அப்படியானால், ஸ்வயமாகவே யூகித்துக் கொண்டு தெற்கு திசையை நோக்கிச் செல்ல வேண்டும்.  "ஒருவன் செய்யும் தோஷத்தின் பலனை நிச்சயமாக அவனேதான் அனுபவித்தாக வேண்டும்", என்று சொல்லிக் கொண்டு குதிரையைத் திருப்பினான். 
Oh! The turn of my stupidity!  I did not notice the route by which I should return.  Therefore I should myself guess and go in the southern direction.  One should certainly taste the fruit of one’s own acion”  So thinking he turned his horse back. 
व्यवर्तिततुरंगश्च सलिलमन्वेषयन्मुहुर्मुरितस्ततो दत्तदृष्टि:, पूर्वोत्तरे दिग्भागे कस्यचन तरुखण्डस्य मध्यभागे, अदृष्टान्तम् अच्छोदं नाम सरो दृष्टवान् ।
குதிரையைத் திருப்பிக் கொண்டு, தண்ணீர் கிடைக்குமா என்று பார்ப்பதற்கு, முகத்தை இங்குமங்கும் திருப்பி பார்வையைச் செலுத்தினான். 
வடகிழக்கு திசையில், ஏதோ ஒரு மரங்களடர்ந்த மத்திய பாகத்தில், அதிர்ஷ்டவசமாக, அச்சோதம் என்ற பெயருடைய ஏறியைக் கண்டான். 
Having turned his horse back, searching for water and casting his eyes hither and thither, he saw in the north-eastern direction and in the midst of a grove of trees, the famous Acchoda lake, endlessly vast (without a second) and extremely charming. 
तस्य च दक्षिणं तीरमासाद्य, व्यपगतपर्याणमिद्रायुधं सरोऽवतार्य, पीतसलिलमिच्छया स्नातं चोत्थाप्य, समीपवर्तिनस्तरोर्मूलशाखायां बद्धा, पुनरपि सलिलमवततार ॥ 
அதனுடைய தெற்கு கரைக்கு வந்து சேர்ந்து, இந்திராயுதத்தினுடைய சேணங்களையெல்லாம் அவிழ்த்து ஏறியில் இறக்கினான்.  தன்னிச்சைப்படி அதனை தண்ணீர் குடிக்கவிட்டு, அதனைக் குளிப்பாட்டி முடித்து, அருகிலிருந்த மரத்தின் மூலக்கிளையில் கட்டிவிட்டு, மீண்டும் தண்ணீரில் இறங்கினான். 
He reached the southern bank and got the horse down into the lake, with its strappings removed, took it out after it had bathed and drunk to its heart’s content, tied it up to the bottom branch of a nearby tree and himself got into the lake again. 
ततश्च प्रक्षालितकरयुगल:, कृत्वा जलमयमाहारं सरस्सलिलादुदगात् ।
பிறகு கைகளை சுத்தம் செய்துவிட்டு, தண்ணீரையே ஆகாரமாக உட்கொண்டு விட்டு, ஏறித் தண்ணீரிலிருந்து வெளியேறினான். 
Then he washed both his hands clean, took an aquatic meal and got out of the waters.