मुहूर्तं विश्रान्तश्च, तस्य सरस उत्तरे तीरप्रदेशे समुच्चरन्तं वीणातन्त्रीझंकारमिश्रममानुषं गीतशब्दमशृणोत् ।
|
சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், அந்த ஏறியின் வடக்குக் கரைப் பிறதேசத்தின் மேல்பகுதியில், வீணை மீட்டும் இசையின் அமானுஷ்யமான சங்கீதத்தைக் கேட்டான்.
|
Having taken rest for a brief moment, he heard some divine music permeating the northern bank of the lake and coupled with the ring caused by the string of a lyre.
|
शृत्वा च समुपजातकुतूहल:, पश्चिमया सरस्तीरवनलेखया, निमित्तीकृत्य तं गीतध्वनिमभिप्रतस्थे ।
|
கேட்டுவிட்டு பொங்கி வரும் குதூகலத்தினால், மேற்கு ஏறிகரையில் இருந்த காட்டுமர வரிசைகொளோடு கூட, கீதம் வரும் இடத்தையே நிமித்தமாகக் கொண்டு சென்றான்.
|
On hearing it he was filled with curiosity and moved through the line of trees grown on the western banks of the lake, having the musical sound for his guide.
|
क्रमेण च गत्वा तं प्रदेशम्, भगवत: शूलपाणे: शून्यमायतनमपश्यत् ।
|
இப்படியாகச் சென்ற அவன், பாட்டு வரும் பிரதேசமானது, பகவான் சூலபாணியின் ஆளரவமற்ற கோவில் என்பதைப் பார்த்தான்.
|
Gradually he reached the place from where the music came and saw a dilapitated
|
प्रविश्याद्राक्षीश्चराचरगुरुं चतुर्मुखं भगवन्तं त्र्यम्बकम् ।
|
உள்ளே நுழைந்ததும், அசையும் பொருள் மற்றும் அசையாப் பொருள் என்று எல்லாவற்றிற்கும் குருவான முக்கண்ணன், நான்கு முகத்தோடு காட்சி அளிப்பதைக் கண்டான்.
|
Entering it he was the three eyed lord, who was four faced and who, was the father of the mobile and the immobile world.
|
तस्य च दक्षिणां मूर्तिमाश्रित्य अभिमुखीमासीनाम्, उपरचितब्रह्मासनाम्, ब्रह्मसूत्रेण पवित्रितकायाम्, उत्सङ्गतां च दन्तमयीं वीणामास्फालयन्तीम् निर्ममाम्, निरहङ्काराम्, प्रतिपन्नपाशुपतव्रतां कन्यकां ददर्श॥
|
அங்கு மேலும், தெற்கு பார்த்த முகத்திற்கு எதிரில், பிரம்மாசனத்தில் அமர்ந்து, பிரம்ம சூத்திரத்தினால் தன் உடலைப் பவித்திரப் படுத்திக் கொண்டு, மடியில் தந்தத்தினாலான வீணையை வைத்து மீட்டிக் கொண்டு, என்னுடையது என்ற மமகாரமும் இலலாமல், நான் என்ற அஹம்காரமும் இல்லாமல், கடுமையான பாசுபத விரதத்தை அனுஷ்டித்துக் கொண்டு, இருக்கும் கன்னிகையைக் கண்டான்.
|
There he saw a maiden observing the Pasupathivrata, who was sitting in the Brahmasana posture, in front of the southern face of the lord whose body had been consecrated by the holy thread, who was stroking a lute made of ivory, placed on her lap and who was devoid of any sense of possession and was free from egotism.
|
अथ गीतावसाने सा कन्यका समुत्थाय, कृतहरप्रणामा चन्द्रपीडमाबभाषे - "स्वागतमतिथये ! कथमिमां भूमिमनुप्राप्तो महाभाग: ? आगम्यताम् । अनुभूयतामतिथिसत्कार:" इति । एवमुक्तश्च चन्द्रपीडस्तां व्रजन्तीमनुब्रजन्, गृहां गत:, सर्वमतिथिसपर्यां सप्रश्रयं प्रतिजग्रह । तया परिपृष्ट: दिग्विजयादारभ्य सर्वमात्मनो वृत्तान्तमाचचक्षे ॥
|
பிறகு கீதம் முடிந்ததும், அந்த கன்னிகையானவள், கை கூப்பி வணங்கிவிட்டு, சந்திராபீடனைப் பார்த்து பேசினாள், "வணக்கம், விருந்தாளியே, எப்படி இந்த பூமிக்கு வந்து சேர்ந்தீர்கள் மஹாபாகரே, வரவேண்டும், விருந்தாளி உபசாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்," என்று கூறினாள்.
|
At the end of the music that girl stood up, bowed before Siva and addressed Chandrapida, “welcome to the honoured guest! How did you, the highly virtuous reach this place? Come here. Let the hospitality be enjoyed” Chandrapida who was told thus, followed her who was going, went into the cave and with respect accepted all hospitality. Asked by her, he told her everything about himself, commencing from the tour of conquest.
|