"अस्ति सकलत्त्रिभुवनललामभूता, अवन्तिषु उज्जयिनी नाम नगरी। तस्यां च नलनहुषदशरथप्रतिम: परिहृतप्रजापीडस्तारापीडो
नाम राजाभूत्।
|
மூன்று லோகத்திலும், எல்லா மேன்மையும் பொருந்திய பூஷணமாக
விளங்கி இருந்தது, அவந்தி தேசத்தில் உள்ள உஜ்ஜயினி என்ற பெயருடைய
நகரம். அந்த நகரத்தில், நள, நகுஷ, தசரத அரசர்களுக்கு
சமமான, ஜனங்களுடைய கஷ்டங்களைப் போக்க கூடிய, தாராபீடன் என்ற பெயருடைய மன்னன ஆண்டு வந்தான்.
|
“in the country of Avanthi,
there is the famous city of
|
तस्य च राज्ञ:
सर्वकार्येष्वाहितमतिरमात्यो ब्राह्मण: शुकनासां नामासीत्। अथ तस्य
सकलान्त:पुरप्रधानभूता महिषी विलासवतीनामाभूत्।
|
அவருடைய அரசவையில், எல்லா காரியங்களிலும் தன் மதியை
உபயோகித்து விஷயம் அறியவல்லவரான, சுகநாஸம் என்ற பெயருடைய அந்தணர்
இருந்தார். மேலும் அந்த அரசனுக்கு,
அந்தப்புரத்தில் எல்லோரிலும் முக்கியமான மகிஷியாக, விலாஸவதி என்ற அரசி இருந்தாள்.
|
His minister was the reputed
Sukanasa, a brahmin, whose keen intellect was directed effectively in all
affairs. He had a famous queen, the chief amongst his concerts, Vilasavathi by
name.
|
राजा च सुतमुखदुर्शनसुखं
न लेभे। यथा यथा च यौवनमतिचक्राम, तथा तथा अनपत्यताजन्म अवर्धतास्य
संताप:॥
|
ராஜாவோ மகனின் முகதரிசனசுகம்
என்ன என்று அறியாமலிருந்தார். எப்படி எப்படி
யௌவனமானது கழிந்து கொண்டிருந்ததோ, அப்படி அப்படியே குழந்தையின்மைத்தன்மையினால் உண்டான கவலையும்
அதிகரித்தது.
|
The king did
not enjoy the pleasure of seeing the lovely face of his son. Even as his youth was wanning, his grief over his
childlessness was waxing.
|
एवं च गच्छति
काले, कदाचिद्राजा क्षीणभूयिष्ठायां रजन्यां, स्वप्ने विलासवत्या:
आनेन शशिनं प्रविशन्तमद्राक्षीत्। प्रबुद्धश्चोत्थाय, तस्मिनेव क्षणे
समाहूय शुकनासम्, तस्मै तं स्वप्नमकधयत्। स तं समुपजातहष: "देव, संपन्ना: सुचिरादस्माकं प्रजानां
च मनोरथा:।"
|
இப்படியாக காலம்
போன போது, ஒரு சமயம் ராஜா,
இருள் அதிகமாக பரவியிருந்த ராத்திரியில், ஸ்வப்னத்தில்,
விலாசவதி முகத்தில் சந்திரனானது நுழைவதுபோல் கண்டார். தூக்கத்திலிருந்து முழித்து, படுக்கையிலிருந்து எழுந்து, அந்த க்ஷணமே சுகநாஸரை அழைத்து,
அவரிடத்தில் அந்த ஸ்வப்னத்தைப்பற்றி கூறினார். அதைக் கேட்டு அவர் சந்தோஷம் அடைந்தவராக,
"தேவனே, வெகு சீக்கிரமாக, நம்முடைய, மற்றும் ஜனங்களுடைய ஆசை நிறைவேறப்போகின்றது.
|
As time rolled
on thus, once when the night had almost run out, the king saw in a dream the
moon entering into the face of his wife, Vilasavathi. He woke up immediately, called in Sukanasa
and narrated the entire dream to him. The minister who was delighted said thus, “my lord, the desire of mine
and our subjects has at long last been fulfilled.“
|
अद्य खलु मयापि निशि स्वप्ने दिव्याकृतिना
द्विजेन विकचं पुण्डरीकमुत्सङ्गे मत्पणयिन्या: मनोरमाया: निहितं दृष्टम् । आवेदयन्ति हि प्रत्यासन्नमानन्दमग्रपातीनि शुभानि निमित्तानि" इति प्रत्युवाच
॥
|
இன்றைக்கு அல்லவா, என்னாலும் கூட ராத்திரியில் ஸ்வப்னத்தில்,
ஒரு திவ்யமான உருவத்தையுடைய பிராமணம் ஒருவன், மலர்ந்த தாமரையை, என்னுடைய பிரியமான மனோரமாவின் மடியில்
வைத்ததைப் பார்த்தேன். அடுத்து அடுத்து வரக்கூடிய
சுப (நிமித்தங்கள்) சகுனங்கள், சந்தோஷமானது அருகில் வருவதைப்
போல இருக்கின்றது" என்று கூறினார்.
|
I too dreamt a dream this night wherein a full-blown
lotus was placed on the lap of my beloved spouse, manorama, by a brahmin of
celestial form. Preceeding good omens do foretell the
imminent happiness.
|
कितिपयदिवसापगमे च देवताप्रसादाद्विवेश
गर्भो विलासवतीम्। तत: क्रमेण पुण्येऽहनि, प्रशस्तायां वेलायाम्, विलासवती सुतमसूत । तदैव शुकनासस्यापि
तनयो जात:। अतिक्रान्ते च षष्ठीजागरे, प्राप्ते दशमेऽहनि, पुण्ये मुहूर्ते,
राजा स्वसूनो: स्वप्नानुरूपमेव चन्द्रापीड: इति नाम चकार। अपरेद्यु: शुकनासोऽपि
आत्मजस्य विप्रजनोचितं वैशम्पायन: इति नाम चक्रे॥
|
சில நாட்களுக்குப்
பிறகு, தேவனுடைய அனுக்கிரகத்தினால்,
கர்பமானது விலாஸவதியினுள் சென்றது. பிறகு முறையாக, புண்ணியமான
தினத்தில், நல்ல சிறந்த நேரத்தில், விலாசவதி
புத்திரனைப் பெற்றெடுத்தாள். அப்பொழுதே,
சுகநாஸருக்கும் ஒரு மகன் பிறந்தான். ஆறு ஜாகரம்
கழிந்த போது, பத்தாவது நாள்
வந்த போது,
புண்ணியமான முகூர்த்த காலத்தில், ராஜா தன் மகனுக்கு, ஸ்வப்பனத்திற்கு ஏற்றார்ப்போல, சந்திரபீடா என்று பெயரிட்டார். மறுநாள், சுகனாஸரும் தன்னுடைய புத்திரனுக்கு,
பிராம்மணஜனத்திற்கு உசிதமான பெயராக, வைசம்பாயனா,
என்று பெயரிட்டார்.
|
After a few days, Vilasavathi became pregnant by god’s grace. In due course, Vilasavathi gave birth to a son on an
auspicious day. At the same time a son
was born to Sukanasa also. When the sixth night of vigil passed
off and the tenth day came, the king named his son ‘Chandrapida’ at an
auspicious hour, in keeping with the dream.
The next day, Sukanasa too named his son, ‘Vaisampayana’
|