तारापीड: क्रीडाव्यासङ्गविधातार्थं
बहिर्नगराद्विद्यामन्दिरमकारयत्। अखिलविद्यापादानार्थमाचार्येभ्यश्चन्द्रपीडं शोभने दिवसे वैशम्पायनद्वितीयमर्पयांबभूव। चन्द्रपीडोऽप्यनन्यहृदयतया अचिरेणैव कालेन सर्वा विद्या जग्राह। वैशम्पायनोऽपि
सर्वाभिस्तमनुचकार ।
|
தாராபீடா, சதா காலமும் விளையாடிக்கொண்டிருப்பதைத்
தடுப்பதற்கு, நகரத்திற்கு வெளியே ஒரு கல்வி கற்கும் ஆலயத்தைக்
கட்டினார். எல்லா வித்தியைகளையும்,
கற்றுக் கொள்வதற்காக, பல உபாத்தியாயர்களை அமர்த்தி,
ஒரு நல்ல நாளில், வைசம்பாயனரோடு கூட இரண்டாகச்
சேர்த்து, ஆசாரியர்களிடத்தில் அர்பணம் செய்துவிட்டார். சந்திராபீடா வேறு எதிலும் மனதைச்செலுத்தாமல்,
மிகக்குறுகிய காலத்தில், எல்லா வித்தியைகளையும்
கிரகித்துக்கொண்டார். வைசம்பாயனனும் கூட, எல்லா
வித்தியைகளிலும் அவரைப்பின் தொடர்ந்து கற்றார்.
|
Tarapida caused
a school to be erected outside the city so as to put an end to
over-attachment to play etc., On an auspicious day, he handed over
his son accompanied by Vaisampayana, to the teachers, for the acquisition of
knowledge in various branches of study.
Chandrapida learnt all the subjects very
quickly, dut to perfect concentration.
And
Vaisampayana emulated him in the study of all arts and sciences.
|
एवं च अधीताशेषविद्यं
समारूढयौवनारभ्भं चन्द्रपीडमानेतुं बलाधिकृतं बलाहकनामानं तारापीड: प्राहिणोत्। स गत्वा विद्यागृहम्, उपसृत्य चन्द्रपीडं, दर्शितविनयो विजिज्ञपत् - "कुमार! महाराज: समाज्ञापयति - पूर्णो: नो
मनोरथा:। अनुमतोऽसि निर्गमाय विद्यागृहात्सर्वाचार्यै:। उपगृहीतशिक्षं पौर्णमासीशशिनामिव
नवोद्गतं पश्यतु त्वां जन:” इति।
|
இப்படியாக, எல்லா விதமான வித்தியைகளையும் கற்றுக்கொண்டவராகவும், யௌவன பருவத்தை அடைந்த அந்த சந்திராபீடாவை அழைத்து வருவதற்கு, பலம்பொருந்தியவனான பலாஹக என்ற பெயருடையவனை, தாராபீடா
அனுப்பினார். அவர் கல்வி ஆலயத்தை அடைந்து, தாராபீடா அதுகில் வந்து,
வினயத்தைக்காண்பித்தவராக, சொன்னார். "குமாரனே! மஹாராஜா இதை உங்களுக்கு கூறச் சொன்னார் -
"எங்களுடைய ஆசை பூர்த்தியாகிவிட்டது". சர்வ ஆச்சார்யர்களாலும் வித்தியாலயத்திலிருந்து
செல்வதற்கு அனுமதிக்கப்பட்டவனாக இருக்கிறாய்.
பூர்ணமாக இருக்கக்கூடிய பௌர்ணமி சந்திரனைப்போன்ற, புதிதாக
வித்தியைகளைக் கற்றவனான உன்னை, ஜனங்கள் யாவரும் பார்க்கட்டும்.
|
Tarapida then
sent Balahaka, a military officer, to bring Chandrapida who had by then
mastered all branches of study and on whom youth had set its foot. He went to the
school, approached Chandrapida in all reverence and submitted thus: “Oh Prince, your revered father commands
thus: “Our ambitions have been fulfulled.
You have been permitted by the teachers to leave the school. Let the subjects see you who have been
educated, even as they would see the newly risen moon on the full moon
day.
|
महाराजेन
प्रेषित: इन्द्रायुधनामातुरंगमो द्वारि तिष्ठति। एष:खलु देवस्य
पारसीकाधिपतिना ’जलधिजलादुत्थितमयोनिजमिदमश्वरत्नम्’ इति संदिश्य
प्रहित:। तदयमनुगृह्यतामधिरोहणेन" इति ॥
|
மஹாராஜாவால் அனுப்பப்பட்ட
இந்திராயுதன் என்ற பெயருடைய குதிரை வாசலில் இருக்கின்றது. இதுவோ, பாரஸீக அதிபதியால் இவ்வாறாக சொல்லி அனுப்பப்பட்டது."சமுத்திர
ஜலத்திலிருந்து வந்தது, யோனியிலிருந்து பிறக்காமல் தானாகவே உற்பத்தியானது,
இந்த குதிரைகளில் ரத்தினம்." ஆகவே நீ இதன் மேலேறி, இந்த
இந்திராயுதமானது உன்னால் அனுக்கிரகிக்கப்படட்டும்.
|
The horse
Indrayudha by name, sent by your father is waiting at the door. It
was sent to your father by the ruler of
|