Thursday, August 8, 2013

Sukanaasa's advice

अथ चन्द्रपीडो निर्गत्य विद्यागृहात्, तं तुरंगमारुह्य, क्रमेण राजद्वारमसाद्य, तुरगादवततार। करतलेन करे वैशम्पायनमवलम्ब्य, बलाहकेनोपदिश्यमानमार्गां राजकुलं प्रविश्य, पितरं प्रणम्य, तेन विसर्जित:, अन्त:पुरमागस्य, मातरं ननाम॥ 
பிறகு சந்திராபீடன், பள்ளியிலிருந்து வெளியே வந்து, குதிரை மீதேறி, இப்படியாகவே, அரண்மனை வாசலை அடைந்து, குதிரையிலிருந்து கீழே இறங்கினான்.  வைசம்பாயனனுடன் கையோடு கைசேர்த்து, அரண்மனையில் நுழைந்து, பலாகன் வழி காட்ட, தந்தையை வணங்கினான், பின் அவரால் அனுமதிக்கப்பட்டதும், அந்தப்புரத்தை அடைந்து, தாயை வணங்கினான்.   
Chandrapida came out of the school, mounted the horse and in due course reached the entrance of the palace where he got down from his steed.   Holding the hands of Vaisampayana with his palm, he entered the palace with the way shown by Balaka and saluted his father.  Having been permitted by him to go, Chandrapida went to the Harem and saluted his mother.   
निर्गत्य च राजकुलात्, प्रविश्य शुकनासभवनम्, दूरावनतेन शिरसा शुकनासं ववन्दे। शुकनास एवसुवाच - "कुमार, भवादृशा एव भवन्ति भाजनान्युपदेशस्य।  
அரண்மனையிலிருந்து வெளியே வந்து, சுகநாசருடைய மாளிகையை அடைந்து, சுகநாசரை ஸிரம் தாழ்த்தி வணங்கினான். சுகநாசர் இவ்வாறாகக் கூறினார், "குமாரனே, உன்னை போன்ற ஒருவன் மட்டுமே, நல்லறிவுறைக்கு தகுதியானவன்.
Coming out of the palace and mounting his horse, he went out to see Sukanasa.  Entering the house he bowed to him with his head bent low.   Sukanasa said, oh my boy, Chandrapida !  only persons like you are worthy of advice.   
अपगतमले हि मनसि स्फटिकमणाविव रजनिकरगभस्तथो विशन्ति सुखमुपदेशगुणा:॥   "अतिगहनं तमो यौवनप्रभवम्। दारुणो लक्ष्मीमद:। अतितीव्रो दर्पदाहज्वरोष्मा। विमो विषयविषास्वादमोह:। 
நல்லுபதேசமென்பது, அழுக்கற்றமனதில் வெதுதுரிதமாகப் படியும், சந்திரக்கிறணமானது எப்படி அழுக்கற்ற ஸ்படிகமணியில் ப்ரதிபலிக்குமோ, அது போல.  யௌவன வயதில் உதிக்கும் இருட்டானது மிகவும் அடர்ந்தது, லக்ஷ்மியினால் உண்டாகும் அகந்தையானது மிகவும் கொடியது.   அகந்தை ஜ்வரத்தினால் உண்டாகும் உஷ்ணமானது மிகத் தீவிரம்.  விஷய சுகமாகிய விஷத்தைக் குடிப்பதனால் உண்டாகும் மோஹமானது கொடியது.
Good instructions enter very easily only into the mind which is rid of impurity, just as the rays of the moon would be reflected on a clean crystal.  The darkness arising from youth is very dense. The infatuation caused by wealth is terrible.  The heat of the scorching fever of arrogance is very severe and the swoon due to the drinking of poison of sensory pleasure is cruel.
अवलोकयतु लक्ष्मीमेव प्रथमम्।  इयं हि लब्धापि खलु दु:खेन परिपाल्यते। परिपालितापि प्रपलायते।  इयं तृष्णां संवर्धयति।  नीचस्वभावतामाविष्करोति। रेणुमयीव स्वच्छमपि कलुषीकरोति। 
முதலில் லக்ஷ்மியைப்பார்ப்போம்.  அவள் கிடைத்தாலும் மிகவும் துக்கப்பட்டுக் காப்பாற்ற வேண்டும். அப்படிக்காப்பாற்றினாலும் அவள் சென்றுவிடுகின்றாள்.   இவள் உலக ஆசைகளை வளர்க்கின்றாள்.  இவளே அழுக்கானவள் போல நல்லவனையும் அழுக்க்டையச் செய்கின்றாள்.  
First look at Lakshmi.   Even if she is got, one has to protect with lot of difficulty. Even if protected well she goes off.  She makes worldly desires grow. Manifests meanness. As if dirt herself, dirties even a pure person.  
गुणवन्तमपवित्रमिव न स्पृशति।  विनीतं पातकिनमिव नोपसर्पति।  मनस्विनमुन्मत्तमिवोपहसति।
குணமுள்ளவர்கள் யாவரும் பவித்திரமில்லாதவர்கள் போல அவர்களைத் தொடுவது இல்லை.    தன்னடக்கத்தொடு இருப்பவனை ஏதோ பாவிபோலெண்ணி அவனை அணுகுவதே இலலை. சுயமரியாதையுள்ளவனை உன்மத்தம் பிடித்தவன் என்று எள்ளி நகையாடுவாள்.
As though he is impure, she does not even touch a good man. Does not approach a modest man, as if he is a sinner.   Redicules a self respecting man.
विद्वांसमपि, महासत्तवमपि, धीरमपि, पुरुषमियं दुर्विनीता खलीकरांति॥   
ஒருவன் படித்தவனானாலும் சரி, சத்வகுணமுடைய நலலவனானாலும் சரி, தீரனானாலும் சரி, பூருஷனானாலும் சரி, இந்த துர்குணமுள்ளவள், அவனைக் கெட்டவனாக்கி விடுகின்றாள். 
Even if a person is a scholar, very good man, courageous, manely, this illnatured lady makes him a rogue.
"देषान् गुणपक्षमारोपयद्भिर्धूर्तै: प्रतार्यमाणा राजानो न प्रणमन्ति देवताभ्य: न मानयन्ति मान्यान् ; नार्चयन्त्यर्चनीयान्।  सर्वथा तमेवाभिनन्दन्ति, योऽहर्निशमधिदैवतमिव, स्तौति, यो वा माहात्म्यमुद्भावयति॥ 
ராஜா எந்த தூர்தர்களால் ஏமாற்றப் படுகின்றாரோ, அவர்கள், பொய்யை மெய்யாக்க வல்லவர், கடவுளை வணங்காதவர், மதிக்க வேண்டியதை மதிக்காதவர், அர்ச்சிக்க வேண்டியதை அர்ச்சிக்காதவர்.  அந்த ராஜாவோ, ஸர்வ காலமும், உன்னைப் போல் தெய்வமில்லை என்று, தன் மஹாத்மியத்தைப் பாடும் இந்த தூர்தர்களைத் தான் புகழ்வார்கள்.    
The kings are duped by rogues who make false as truth, do not pray to god, do not respect the respectable, do not worship the worshipable.   That king in turn praises only these rogues, who praise him as god and proclaim his greatness all the time.   
तदस्मिन्महामोहकारिणि यौवने, कुमार! तथा प्रयतेथा:, यथा न निन्द्यसे साधुभि:; न धिक्क्रियसे गुरुभि: ; नोपालप्स्यसे सुहृद्भि: ; न प्रतार्थसे धूर्तै:; न प्रलोम्यसे वनिताभि:; न विडम्ब्य्से लक्ष्म्या; नापहियसे सुखेन" इत्युपदि:योपशशाम ॥
இப்படியாக, யௌவனமானது மஹாமோகத்தில் தள்ளிவிடும். குமாரனே, அதனால், பிரயத்தனம் செய்வாயாக......
சாதுக்கள் உன்னை நிந்திக்காதவாறு
குருமார்கள் உன்னைக் கண்டு கோபப்படாதவாறு,
உன் நலன் விரும்பும் நண்பர்கள் உன்னைக் கண்டு ஒதுங்காதவாறு,
தூர்த்தர்கள் உன்னை ஏமாற்றாதவாறு,
இளமங்கைகள் உன்னை மயக்காதவாறு,
லக்ஷ்மீ உன்னை ஏமாற்றாதவாறு,
விக்ஷயசுகங்கள் உன்னை மயக்காதவாறு.
இப்படியாக சுகநாசர் உபதேசத்தை நிறுத்தினார்.    
In this way, youth will push you into great delusion, so my dear Kumara, try be cautious and …..  See that sadhus do not censure you,  Gurus do not get angry at you, Friends who are your well wishers do not run away from you,  Rogues do not cheat you,  Women do not entice you,  Lakshmi does not dupe you,  Worldly pleasures do not delude you. “  So saying Sukanasa stopped.