अत्रान्तरे
सरसो नातिदूरवर्तिनि तपोवने प्रतिवतन् हारीतनामा जाबालेस्तरय:, तदेव कमलसर: सिष्णासुरुपागमत्
। स च मां तदवस्थमालोक्य समुपाजातदय:, अङ्गुल्या कतिचित्सलिलबिन्दुनापातयत्
। अभिषेकावसाने च मां गृहीत्वा तपोवनाभिमुखं शनैरगच्छत् ॥
|
அந்த சமயத்திலே, அந்த ஏறியிலிருந்து அதிக தூரமில்லாத
இடத்தில் இருக்கின்ற, தபோவனத்தில் வசித்த ’ஹரிதா’ என்ற பெயருடைய ஜாபாலியின் மகன், அதே தாமரைக் குளத்துக்கு, கால கர்மங்களை
முடிப்பதற்கு வந்தார். அவரும் என்னுடைய அவஸ்தைகளைப்
பார்த்துவிட்டு, என் மேல் தயை கொண்டு, என்னை எடுத்துச் சென்று, விரல்களினால் சிறிது தண்ணீர்
எடுத்து ஊற்றினார். குளித்து முடித்து விட்டு
என்னை எடுத்துக் கொண்டு தபோவனத்தை நோக்கி மெதுவாகச் சென்றார்.
|
In the
meantime, Haritha son of Jabali who lived not far away from the lake came to the
same lotus pond for his daily rituals. On seeing me in such misery, he took mercy on me, took me to the bank of
the lake and made me drink a few drops of water through his fingers. After the bath,
he took me along and went slowly towards his hermitage.
|
गत्वा च
मामेकदेशे स्थापयित्वा, हरित: पितु: पादावुपगृह्य अनतसमीपवर्तिनि कुशासने सनुपाविशत्। किंचिदुपजातकुतूहलो जाबालिर्मामतिप्रशान्तया
दृशा दृष्ट्वा "स्वस्यैवाविनयस्य फलमनेनानुभूयते" इत्योवाचत्।
|
சென்றவுடன், என்னை ஒரு இடத்தில் இருத்தி, ஹரிதன் தந்தையின் காலைத்தொட்டுவிட்டு, வெகு அருகில்
இல்லாமல்(சற்று தள்ளி) தற்பைப்புல் பாயில் அமரிந்தார். சிறிது பொங்கிவரும் ஆச்சரியத்தால் ஜாபாலி, என்னை மிகவும் சாந்தமாக பார்த்துவிட்டு,
"தன்னுடைய வினயமில்லாத செயலினால் வந்த பயனை இவன் அனுபவிக்கிறான்"
என்று கூறினார்.
|
Reaching it, Harita placed me in a
corner, touched the feet of his father and sat on a Darbha seat, not too very
close. Jabali having grown a little curious, looked at me with calm dignity and
said, “The fruit of his own immodesty is being tasted by him,”
|
"भगवन्! कीदृशोऽनेन अविनय: कृत:? क वा कृत:? जन्मान्तरे वा कोऽयमासीत्?"
इत्युपच्यमानस्तपोषनपरिषदा स महामुनि: प्रत्यवदत्॥
|
"பகவனே!
இவன் எவ்விதமான வினயமில்லாத செயலைப்புரிந்தான்? இவன் என்ன செய்தான்? முன் ஜன்மத்திலா, எதற்காக இவன் செய்தான்?” என்று அங்கு கூடியிருந்த தவத்தில்சிறந்தவர்கள் கேட்டதன் பொருட்டு அந்த
மஹாமுனி பதில் கூறினார்.
|
That great sage who was
requested by the assemblage of hermits with the questions, ‘revered sir, what
kind of immodesty was committed by the bird?
When and what for was it commited? Replied thus”
|