Friday, August 9, 2013

Shabara sainyam


वैशम्पायनस्तु सादरमब्रवीत् - "अस्ति मध्यदेशालङ्कारभूता विन्ध्याटनौ नाम।   भगवतो महामुनेरगस्त्यस्य सरिता गोदावर्या परिगतमाश्रमपदमासीत्।
வைசம்பாயனர் மரியாதையுடன் சொல்லத் தொட்ங்கினார், "மத்திய தேசத்தை அலங்காரப்படுத்துவதாக விந்தியா என்று ஒரு காடு இருந்தது.   அங்கு பகவான் மஹாமுனி அகஸ்தியருடைய ஆசிரமம், கோதாவரி நதியால் சூழப்பட்டு இருந்தது.   
Vaisampayana respectfully narrated thus: There, adorning the middle country, is the forest by name ‘Vindhya’. There is the hermitage of the great sage Agastya, surrounded by the river Godavari.
तस्य च नातिदूरे, अगाघम्, अप्रतिमम्, अस्ति पम्पाभिधानं पद्मसर:। तस्य च पश्चिमे तीरे बभूव महान् जीर्ण: शल्मलीवृक्ष:।
அதிலிருந்து அதிக தூரமில்லாத இடத்தில், அளவற்றதுமான, ஈடு இணையற்றதுமான, பம்பா என்கின்ற தாமரைக்குளம் இருந்தது. அதனுடைய மேற்குக்கரையில் ஒரு பெரிய பட்டுப்போன இலவம்பஞ்சு மரம் இருந்தது.
Not far away is an unfathomable and unparalleled lotus-pond, by name Pampa.   On its western banks stands a huge and decayed silk-cotton tree.   
तत्र च शाखाग्रेषु कोटरोदरेषु स्कन्धसन्धिषु च नानादेशसमागतानि शुकशकुनिकुलानि प्रतिवसन्ति स्म।  एकस्मिंश्च जीर्णकोटरे जायया सह निवसत: पितुरहमेव एक: सूनुरभवम्। जननीच मे प्रसववेदनया लोकान्तरमगमत्।
அதனுடைய கிளைகளின் ஓரங்களிலும், பொந்துகளிலும், கிளை இடுக்குகளிலும், பல தேசங்களிலிருந்தும், இங்கு வந்த கிளிகளும் மற்ற பறவைகளின் குடும்பங்களும், நன்றாக வாழ்ந்து கொண்டிருந்தது. அந்த மரத்தில் பட்டுப்போன ஒரு பொந்தில் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருந்த என் தந்தைக்கு ஒரே மகனாகப் பிறந்தேன்.   என்னைப் பெற்றவளும் கூட பிரசவவேதனையால் மேலுலகத்தை அடைந்தாள்.
There, at the end of the branches, in the hollows and on the splits of the tree branches, lived, many families of parrots and birds, which had congregated from various parts of the country. In one of the decayed hollow, my father lived with his wife and I was born as the only son to them.   One who gave birth to me, reached the higher abode on account of labour pain.   
दु:खितोऽपि तात: सुतस्नेहादन्तर्निगृह्य शोकम्, एकाकि मत्संवर्धनपर एवाभवत्॥  एकदा तु स्पष्ठे जाते प्रत्युषसि, मृगयासक्तस्य महतो जनसमूहस्य क्षोभितकाननं कोलाहलमशृणवम्।  अभिमुखमापतश्च शबरसैन्यमद्राक्षम्।
என் தந்தை துக்கத்தால் பீடிக்கப்பட்டிருந்தாலும், பிள்ளைப்பாசத்தினால் சோகத்தை உள்ளடக்கிக்கொண்டு, என்னை வளர்க்கும் பொருட்டு ஒருவராகவே இருந்தார்.  ஒரு நாள், நன்றாக பொழுது விடிந்த சமயத்தில், வெட்டையாடுபவர்களினுடைய பெருங்கூட்டத்தினுடைய, அந்த கானகத்தையே கலக்கக்கூடிய கோலாகல சப்தத்தைக் கேட்டேன்.  (பின்) வேட்டைக்காரர்கள் கூட்டம் எங்களை நோக்கி வருவதை நான் கண்டேன்.  
Though my father was very much sorrowful, he suppressed his grief due to his fatherly affection for the son, remained alone and was solely engaged in bringing me up.  Once, when the day had broken clearly, I heard a loud and confused noise caused by a multitude of men engaged in hunting, rocking the entire forest.   I then actually saw an army marching towards me.   
तत्रैको जरच्छबर: तं शाल्मलीपादमारुह्य, शुकशाबकानपगतासून् कृत्वा क्षितावपातयत्। तातस्तु पक्षसंपुटे नाच्छाद्य मां किंकर्तव्यतामूढरतस्थौ।  असावपि पाप: कोटरादाकृष्य तातमगतासूमकरोत्; उपरतं च तमवनितले अधोमुखप्रमुच्छत्।  अहमपि तच्चरणान्तराले प्रवेशितशिरोधरस्तेनैव सहापतम्। सावशेषत्वादयुषो मे, नाङ्गान्यशीर्यन्त। मां तु लब्धजीविताशं बलवती पिपासा परवशमकरोत्।
அதில் ஒரு கிழவேடுவன், அந்த இலவம்பஞ்சு மரத்தில் ஏறி, கிளிகளின் குஞ்சுகளை எதுத்து (கொன்று) உயிரற்ற உடல்களாக ஆக்கி, தரையில் எறிந்தான்.   என் தந்தையோ, தன் சிறகுகளால் என்னை மறைத்து, என்ன செய்வது என்றறியாமல் திகைத்து நின்றார்.   பாபியான அவன், பொந்திலிருந்து என் தந்தையை வெளியே இழுத்து (கொன்று) உயிரற்ற உடலாக ஆக்கினான். பின் தலைகீழாக அவரை பூமியிலே எறிந்தான்.  நானும் கூட அவருடைய கால்களுக்கு நடுவில், என் கழுத்தை நுழைத்தவனாக, அவருடனேயே கீழே விழுந்தேன்.   விதிப்படி என் ஆயுசு கெட்டியாக இருந்ததால், என் அங்கங்கள் உடையாமலிருந்தன.   நானொ உயிரின்மேல் பீடிக்கப்பட்ட ஆசையினால், பலமான தாகத்தால் கலங்கிப்போயிருந்தேன்.   
An old hunter amongst them ascended the silk-cotton tree and killed the young ones of the parrots and threw them on the ground.   covering me with his wings, my father stood stunned, not knowing what to do.  That sinned hunter drew my father from out of the hollow, made him a lifeless body and dropped him to the ground, upside down.  I too, entered with my neck between his legs, fell on the ground.  With my destiny to live longer, my limbs did not break up.  I possessed by the desire to live, was overpowered by a terrible thirst was agitated.