अत्रान्तरे कञ्चुकिना समभिहिता
महाश्वेता गन्धर्वराजं द्रष्टुं ययौ। चन्द्रापीडोऽपि
तयैव सह निर्गत्य पूर्वदृष्टेन केयूरकेणोपदिश्यमानमार्ग:, क्रीडापर्वतमणिमन्दिरमगात्। प्रविश्य च मणिगृहम्, मुहूर्तमिव स्थित्वा, निर्गम्य, उपवनलोकनकुतूहलाक्षिप्तचित्त:, क्रीडापर्वतशिखरमारुरोह। कादम्बरी
तु अनङ्गाक्षिप्तचिता रौघस्योपरिनं तलमारुह्य, विहस्य तं विलोकयन्ती, तेन च विलोक्यमाना, महान्तमपि कालमतिक्रान्तं नाज्ञासीत्। प्रतीहार्या च निवेदितमहाश्वेताप्रत्यागमना तस्मादवततार।
चन्द्रपीडोऽपि तस्मादवतीर्य निर्वर्तितस्नानविधी:, अर्चिताभिमतदैवत:, क्रीडापर्वतक एव सर्वमाहारादिकमह:कर्म
चक्रे॥
|
இதற்கிடையில்,
வேலையாளால் கூப்பிட்டனுப்பப் பட்ட மஹாஸ்வேதா கந்தர்வராஜனை திரிசிக்கச் சென்றாள்.
சந்திராபீடனும் அவளுடன் கூட வெளியே வந்து, முன்பே பார்த்திருந்த கேயூரகன் வழி
காட்ட விளையாட்டு மணிமண்டபத்தை வந்தடைந்தான். மணிமாளிகையின் உள் சென்று சிறுது
நேரம் இருந்து விட்டு, பின் வெளியே வந்து, குதூகல மனத்துடன் கீழே உள்ள
நந்தவனத்தைப் பார்பதற்கு, விளையாட்டு மலையின் சிகரத்தில் ஏறினான். காதம்பரியும் காமனால் தாக்கப்பட்ட
சித்தத்துடன், அவளிருந்த மேல் மாடிக்குச் சென்றாள். அங்கு சிரித்த முகத்துடன்
நின்ற சந்திராபீடனைப் பார்க்க, அவனும் இவளைப் பார்க்க, காலம் போனதே தெரியாமல்
நின்றார்கள். வேலைக்காரி வந்து மஹாஸ்வேதா வந்துவிட்டாள் என்று சொன்னவுடன் தான்
இறங்கி வந்தார்கள். சந்திராபீடனும்
இப்படியாக இறங்கி வந்து, விதிக்கப் பட்ட ஸ்நானம் முதலிய கர்மங்களைச்
செய்துவிட்டு, தன் அபிமான தேவதையை அர்ச்சித்து விட்டு, விளையாட்டு மலையிலேயே
ஆகாரம் முதலிய சர்வ கர்மாக்களையும் முடித்துக் கொண்டான்.
|
In the meanwhile, Mahasveta went away to meet the King of the Gandharas,
having been told by the Chamberlian.
Chandrapida came out with her and reached the gem-house on the sport
hill, with his way being shown by Keyuraka whom he had met once before. Entering that gem house, he stayed there
for a brief while, came out and with his mind filled with eargerness to see
the gardens down below, got on the sport hill. Kadambari with a mind distracted by Cupid,
got to the topmost floor of the place, saw him with a smile and seen by him
in turn, did not notice the passage of time, for quite long. Having been informed of the return of
Mahasveta by the female-doorkeeper, she got down. Chandrapida got down from the sport hill,
worshipped his favourite deities and on the sport hill itself finished all
the diurnal duties like eating etc.,
|