Thursday, August 8, 2013

Mahashweta story-3

अथ लोहितायति रविबिम्बे, तस्य सखा कपिञ्जल: समागत्य मामेवमब्रवीत् - "राजपुत्रि! किं ब्रवीमि! वागेव मे नाभिधेयविषयमवतरति त्रपया ।  अस्ति भवत्या: समक्षमेव मकरकेतुना क्षणेनायमवस्थान्तरमप्रतीकारमुपनीत: ।  अकालान्तरक्षमश्चायमस्य मदनविकार: । सततमतिगर्हितेनाकृत्येनापि रक्षणीयान्मन्यन्ते सुहृदसून्साधव:। तदत्रागतोऽहम्तदेवमस्थिते, यदत्र अवसरप्राप्तम्, अस्मदागमनस्य चानुरूपम्, तत्र प्रभवति भवती" इत्यभिधाय प्रययौ ॥ 
பிறகு சூர்யக் கிரணங்களானது சிகப்படையும் தருவாயில், அவனுடைய நண்பன் கபிஞ்சலன் வந்து என்னிடம் கூறினான், "ராஜபுத்திரீ! என்னெவென்று சொல்லுவேன்! வாக்கினால் சொல்லக்கூடாத விஷயமாகையால் வெட்குகிறேன்.  தாங்களுக்குத் தெரிந்ததே, தங்கள் முன் இருக்கும் போதே, காமனால் வேறு ஒரு அவஸ்தையான நிலமைக்குத் தள்ளப் பட்டான் என்று.  அகாலத்தில் வந்த இந்த மன்மத விகாரமானது, நொடி பொழுது கூட கடத்தக் கூடியது அல்ல. நல்லதையே நினைக்கக் கூடிய நண்பனின் கடமையானது, எப்படியாவது நண்பனின் உயிரைக் காப்பாற்றுவதே.  அதனால் தான் நான் இங்கு வந்திருக்கிறேன். இதுவே அங்குள்ள அவசரநிலமை. என்னுடைய இந்த வருகைக்கு அனுகூலமாக தாங்கள் எது செய்ய வேண்டுமோ அதையே செய்வீர்களாக", என்று கூறிவிட்டு சென்றான்.  
When the sun reddened, his friend Kapinjala met and told me thus, “Oh Princess! What shall I say?  Out of shame, I cannot gather speech to tell the matter which is to be told. You know that, even in you very presence, he was in a trice led by cupid to a different (agitated) condition, hard to be counteracted.  His love affiliction does not brook any delay.  Good men always consider the life of their friends to be protected, even by highly condemnable and sinful means. Hence have I come here.  When this is the case, you should do that which is oppertune and will serve the purpose of my visit.” So saying, he went away. 
अथास्तमुपगते सवितरि, मदीयताम्बूलकरङ्कवाहिन्या तरलिकयानुगम्यमाना, प्रासादशिखरादवतीर्य, यस्मिन् प्रदेशे स आस्ते, तमुद्देशमुपागमम् ।  तस्मिन्नेव चास्य सरस: पश्चिमे तटे, पुरुषयेव रुदितध्वनीं विप्रकर्षान्नातिव्यक्तमुपालक्षयम् ॥ 
சூரியன் அஸ்தமித்த பிறகு, என்னுடைய, தாம்பூலம் ஏந்தும் கையான தரலிகா உடன் கூட, என் மாளிகைச் சிகரத்திலிருந்து கீழே இறங்கி, எந்தப் பிரதேசத்தில் அவன் இருப்பானோ, அங்கு ஒரு உத்தேசமாக சென்றேன். அப்போது, அந்த ஏறியின் மேற்குக்கரையில் ஒரு புருஷனுடைய அழுது அலரும் குரல் வெகு தூரத்தில் கேட்டது.  
When the sun had set, I got down from the top-floor of my palace, accompanied by the betal-bearer, Taralika and went to the place where he was.  There itself, on the western banks of the lake, I heard something like a human cry, not very much audible because of the distance. 
"तरलिके! किमिदम् ?" इत्यभिदधाना, तदभिमुखमतित्वरितं गच्छन्ती, "हा हतोऽस्मि! हा दग्धोऽस्मि! अन्धोऽस्मि संवृत्त:!" इति विलपन्तं कपिञ्जलमश्रोषम् ! तच्च श्रुत्वा त्वरितै: पादप्रक्षेपै: प्रस्खलन्ती पदे पदे, तं प्रदेशम् गत्वा, कपिञ्जलेन कण्ठे परिष्वक्तं तत्क्षणगतजीवितं तमहं पापकारिणी महाभागमद्राक्षम् ।  दृष्ट्वा च "हा अम्ब! ह तात! हा सख्य:!" इति व्याहरन्ती ग्रहगृहीतेव व्यलपम्।  ततश्च तथाभूते तस्मिन्नवस्थान्तरे मरणैकनिश्चया, "अयि! काष्ठान्याहृत्य विरचय चिताम्" इति तरलिकामब्रवम् ॥ 
தரலிகா என்ன இது? என்று கூறிக்கொண்டே, அதை நோக்கி வெகு வேகமாக சென்றேன், "ஆ! நான் அழிந்தேன்! நான் எறிந்து போனேன்! நான் குருடனாகிப் போனேன்! என்று அழுது புலம்பும் கபிஞ்சலனுடைய குரலைக் கேட்டேன்.  இப்படிக் கேட்டவுடன் வெகு துரிதமாக, என் பாதங்கள் அடி மேல் அடி தடுக்க, அந்த பிரதேசத்தை அடைந்த போது, கபிஞ்சலனால் கழுத்தைக் கட்டிக் கொண்டு, அந்த க்ஷணமே ஜீவனை விட்டிருந்த, அந்த மஹாபாகனை பாவக்காரியான நான் கண்டேன்.  கண்டவுடன், ஆ அப்பா! ஆ அம்மா! ஆ தோழீ! என்று கிரகம் பிடித்து ஆட்டுவிப்பவளைப் போல அலறினேன்.  பிறகு அந்த க்ஷணமே, அந்த அவஸ்தைகளுக்கு நடுவில், மரணம் ஒன்றே என்று நிச்சயித்து, "அடியே, குச்சிகளை எடுத்துவா சிதையை மூட்ட" என்று தரலிகாவிடம் கூறினேன். 
Asking Taralika as to what all that was about, I went further up very hurriedly and heard Kapinjala crying thus: “Ah! I have been ruined. I have been burnt up. I have been rendered blind.”On hearing all this, I went to that place, faltering at every step because of my hurried gait.  There sinful that I was, I saw that great man (Pundarik)who had died just then and been embraced by Kapinjala by the neck. On seeeing him I cried out “Oh father! Oh mother!  Oh friends! And lamented as though possessed by an evil sprit.  Thereafter, at that unhappy turn of events, I made up my mind to die and asked Taralika: “Eh! Gather sticks and prepare a funeralpyre.” 
अत्रान्तरे कुमुदवलदेह: कोऽपि पुरुषश्चन्द्रमण्डलविनिर्गतो गगनादवतीर्य, बाहुभ्यां तमुपरतमुत्क्षिपन्, "वत्से महाश्वेते!  न परित्याज्यास्त्वया प्राणा: ; पुनरपि तवानेन सह समागमो भविष्यति"  इत्यभिधाय, सहैनानेन गगनतलभुदपतत् ।  अहं तु सभया सविस्मया "किमिदम्; किमिदम्?" इति कपिञ्जलमपृच्छम् ।  असौ तु ससंभ्रमम् "दुरात्मन् ।  क मे वयम्यमपहृत्य गच्छसि?"  इत्यभिधाय, उत्पतन्तं तमेवानुसरन्नन्तरिक्षमुदगात्।  कपिञ्जलप्रत्यागमनकाङ्क्षया च तस्मिन् काले नोत्सृष्टवती जीवितम् ॥   
அதற்குள்ளாக, அல்லி போன்று வெளுப்பான தேகத்தை உடைய, எவனோ ஒரு புருஷன், சந்திர மண்டலத்திலிருந்து வெளியே வந்து, இறங்கி வந்து, தன் இரு கரங்களினாலும் அந்த இறந்த புண்டரீகனைத் தூக்கிக் கொண்டு, "குழந்தை மஹாஸ்வேதா! உன்னுடைய பிராணனை நீ விடக் கூடாது, மீண்டும் அவன் திரும்பும் போது அவனுடன் இருப்பாயாக" என்று கூறி புண்டரீகன் உடலை எடுத்துக் கொண்டு ஆகாசத்தில் சென்றான்.  நானோ பயத்தோடும் ஆச்சரியத்தோடும், "என்ன இது! என்ன இது! என்று கபிஞ்சலனிடம் கேட்டேன். 
அவனோ "துராத்மனே, அவனை எங்கு அபகரித்துக் கொண்டு செல்கின்றாய்? என்று அலறிக் கொண்டே, அவன் பின்னாலேயே இவனும் மேலே சென்றான்.  கபிஞ்சலன் திரும்பி வரும் காலம் வரையில், என்னுடைய ஜீவனை விடுவதில்லை என்று முடிவெடுத்தேன் 
In the meanwhile, a certain man whose body was as white as the lilly, came out of the disc of the moon, got down through the sky, took the dead Pundarika by both his hands and addressed me thus:  Oh my child, Mahasveta!  Life should not be shed by you.  there will be your reunion with him, somtime later.”  So saying, he flew into the sky along with him.  I, filled with fear and struck with wonder, asked Kapinjala as to what all that was about.  But, he said in great agitation, “oh wicked fellow! Where do you go, taking my friend along?”  he too got up into the sky, following him who had already gone up.  Awaiting the return of Kapinjala, I did not cast my life at that time.