Thursday, August 8, 2013

Mahashwetha story-2-meeting Pundarika

"कुतोऽयम्?" इत्युपारूढकुतूहला च कतिचित्पदानि गत्वा, अतितेजस्विनम्, आत्मानुरूपंण सवयसापरेण तापसकुमारेणानुगम्यमानम्, अतिमनोहरं, स्नानार्थमागतमेकं मुनिकुमारकमपश्यम् ॥ 
என்ன அந்த நறுமணம் என்று ஆறாய குதூகலத்துடன் சில அடிகள் முன் சென்று பார்த்தேன்.  மிகவும் தேஜஸை உடைய, அழகிய ரூபத்தையுடைய, என்னை ஒத்த வயதையுடைய, தபஸ்விகுமாரன் போல தோன்றக்கூடிய, மிகவும் மனொஹரமான தோற்றத்தையுடைய, முனிகுமாரன் ஒருவன் நீராடுவதற்காக வருவதைக் கண்டேன். 
I was curious to know as to where it came from.  Hence, I moved a few steps forward and espied a hermit youth who was very lovely and had come there for his bath. 
दृष्ट्वा च तेन कर्णावतंसीकृतामदृष्टपूर्वां कुसुममञ्जरीम्, "अस्या: परिभूतान्यकुसुमामोदो नन्वयं परिमल:" इति विचिन्तयन्तीमेव मां रूपकपक्षपाती नवयौवनसुलभ: कुसुमायुध: परवशामकरोत् ।
அவனுடைய காதுகளில் இதுவரை எங்கும் கண்டிராத பூக்கொத்து ஒன்று கண்டேன். "இதனுடைய சுகந்தம்தான் மற்ற மலர்களின் சுகந்தத்தையெல்லாம் வெட்கச் செய்கின்றதோ" என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, புதிய யௌவனத்தை சுலபமாக ஆட்கொள்ளும், மலராயுதத்தை வைத்துக் கொண்டிருப்பவன், என்னை பரவசமடையச் செய்து விட்டான்.  
Noticing a bunch of flowers seen never before, which he had adorned his ear with, I thought, ‘this is the fragrance of this bunch of flowers which has put to shame the fragrance of all other flowers. Even as I was thinking so, Cupid who favours loveliness alone and who is easily accessable to fresh youth, overpowered me. 
अथ कृतप्रणामायां मयि, दुर्लङ्घय्शासनतया मनोभुव:, चपलतया मनोवृत्ते:, तथाभवितव्यतया च तस्य वस्तुन:, तमपि प्रदीपमिव पवनस्तरलतामनयदनङ्ग: ।  
என்னால் வணக்கம் செய்யப்பட்ட அவன், காமன் இடும் கட்டளைகளை எல்லாம் மறுக்க முடியாமலும், மனதிலிருந்து எழக்கூடிய சபலத்தினாலும், ஏற்கனவே விதிக்கப்பட்ட விதியின் படியும், காற்றினால் ஆட்டம் கொடுக்கப்பட்ட தீபத்தைப் போலவும், நடுங்கியது அவன் அங்கமெல்லாம்.
When I had paid my obeisance to him, the formless cupid made him shaky, even as the wind would cause the lamp to flicker, because of Love whose dictates cannot be disobeyed, of the fickleness of the mental workings and of the pre-ordined inevitability of mundane happenings gaining an opportunity.  
प्राप्तप्रसरा चोपसृत्य तं सहचरं मुनिबालकं प्रणामपूर्वकमपृच्छम् - "भगवन् ! किमभिधानोऽयम्कस्य चायम्? किंनाम्नस्तरोरनेनावतंसीकृता मञ्जरी?" इति ॥ 
பின் அவனுடைய சகாவான முனிபாலகனை நெருங்கிச் சென்று, முதலில் வணங்கி, இவ்வாறாகக் கேட்டேன், "பகவன், இவருடைய பெயர் என்ன? யாருடையவர் இவர்? அவர் அணிந்திருக்கும் பூவானது எந்த பெயருடைய மரத்திலிருந்து வந்தது? 
I approached the hermit-boy this companion, saluted him and asked him, “oh revered Sir, what is his name?  Whose son is he?  What is the name of the tree whose flower-bunch he has bedecked himself with?” 
स तु मामीषद्विहस्याब्रवीत् - "अस्ति खलु महामुनिर्दिव्यलोकनिवासी श्वेतकेतुर्नाम । तस्य च मन्दाकिनीमवतरतस्त्रिभुवनसुन्दरं रूपमास्वादयन्त्या: लक्ष्म्या: सद्य एव कुमार एव पुण्डरीकनामा समुद्पादि ।
அவனோ! என்னைப் பார்த்து புன்னகைத்துவிட்டு - "திவ்ய லோக வாஸியான மஹாமுனி ஸ்வேதகேது என்ற பெயருடையவர் இருக்கின்றார்.  அவர் மந்தாகினி நதியில் இறங்கிக் குளிக்கையில், திருபுவனத்திலும் சுந்தரமான அவர் ரூபத்தைப் பார்த்து நின்ற லக்ஷ்மி, அந்த நேரத்திலேயே குமாரன் ஒருவன் சம்பவித்தான், அவன் பெயர் புண்டரீகன் என்பதாகும். 
He smiled at me a little and said: “there is a celebrated sage, Swetaketu by name, residing in the celestial region.  When once he got into the divine Ganges, his loveliness, the best in the three worlds, was drunk deep by Lakshmi, immediately, a son was born to him, who was named Pundarika. 
इयं च पारिजातपादपस्य मञ्जरी ।  अहं चास्य सखा कपिञ्जलो नाम"  इत्युक्तवति तस्मिन्, स  तपोधनयुवा, "गृह्यतामियम्" इत्युक्त्वा मदीये श्रवणपुटे तामकरोत् ।
"இது பாரிஜாத மரத்தின் பூக்களாகும், நான் அவனுடைய தோழன், கபிஞ்ஜலன் என் பெயர்" என்று கூறியவுடன், அந்த தபோதன யௌவன புருஷன், "இது உன்னால் எடுத்துக் கொள்ளப்படடட்டும்" என்று கூறுவிட்டு, அதை என்னுடைய காதுகளில் தானே வைத்துவிட்டான். 
This bunch of flowers is that of the Parijatha tree.  And I am his friend, Kapinjala by name.”  when he had stated thus, that youthful ascetic said, “Let this be taken by you” and placed the bunch of flowers at my ear. 
स च तदा स्वकरतलादक्षमालां गलितामपि नाच्चासीत् ।  अथाहं तामसंप्राप्तामेव भूतलमक्षमालां गृहीत्वा कण्ठाभरणतामनयम् । 
அப்போது அவனுடைய கையிலிருந்து அக்ஷமாலை நழுவி விழுந்ததைக் கூட கவனிக்கவில்லை.  அது கீழேவிழும் முன் நான் அதை பிடித்து எடுத்து கழுத்திலே ஆபரணமாக அணிந்து கொண்டேன்.  
In that act, he did not even notice the strings of beads slipping from his palm.  I caught it even before it reached the ground and wore it as a necklace. 
इत्थंभूते च व्यतिकरे, छत्त्रग्राहिण्या वचनेन स्नातुमवातरम् ।  उत्थाय च कथमपि अम्बया सह तमेव चिन्तयन्ती स्वभवनमयासिषम् ॥ 
இப்படிப் பட்ட நிலமைக்கு வந்த பிறகு, குடைபிடிப்பவன் சொல் கேட்டு, ஏறியில் இறங்கிக் குளித்தேன்.  குளித்து எழுந்து, எப்படியோ தாயுடன் கூட அவனையே நினைத்துக் கொண்டு, என் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தேன். 
When things had come to such a pass, I, having been told by the umbrella bearer, got into the lake to take my bath.  Getting out of the waters, I went with very great difficulty to my residence with my mother, exclusively thinking about him, all the way.