Friday, August 9, 2013

INTRODUCTION

“Kadambari” has been written by Banabhatta. In recent times Pandit Krishmachariar has written it as “Kadambarisangraha” & "Laghu Kadambarisangraha". I am a student of Sanskrit and have extreme love for Sanskrit subject.  I just liked this story so much, that I translated the "Laghu kadambarisangraha" into Tamil.  I wanted to share the joy of reading this story with others and hence posting it in the net.  

"Laghu Kadambarisangraha has been prescribed for 'Diploma in Sanskrit' of the Madras University.  

"Kadambaraishagraha" has been prescribed for "M.A., in Sanskrit of SASTRA University.  (But the portion prescribed is only upto "acchoda saro varnanam".)  


PLEASE DO NOT TAKE PRINTOUTS AND WASTE PAPER - SAVE TREES-SAVE OUR PLANET EARTH.
I am posting it as Mobile/Tab friendly and hence can be read directly from the Mobile/Tab.  

KADAMBARI INTRODUCTION

“Kadambari” is a romantic novel in Sanskrit. It was written by Baanabhatta in the first half of the 7th Century, who lived in the court of King Harsha Deva. On completing the purvabhaaga he died and hence according to the plan laid out by the late father, his son Bhushanabhatta wrote Uttarabhaaga and completed the novel.  There are translations in English from the original Sanskrit text of “Kadambarisangraha”, by Kale, Layne and Ridding. This is claimed to be the first ever novel in the world. 

The plot of the novel is adopted from the story of King Sumanas written by Gunaaddhya as “Brihatkathaa” (a collection of stories from the now extinct Paishachi language). This part ‘Kadambarisangraha’ being ‘Makharanthika upaakyaanam’ of ‘Brihatkathaa’. 
This story also appears in Somadeva’s “Kathasarithasaagara” written in Sanskrit.
This story had been translated probably into most of the ancient Indian languages like all sub-divisions of Prakrita.  This is very famous in Marathi and Kannada to the extent that the name ‘novel’ itself has been replaced by the word ‘Kadambari’ in these languages. 
This “Kadambari” has been abridged as “Kadambarisangraha” and further abridged as Laghu Kadambarisangraha" by Pandit.R.V.Krishnamachariar.  
* * * * * * * *

Sanskrit Literature can be divided into two namely
Drushya = Naatakam

Adrushya = Sravyakavyam 
* * * * * * * * 
गध्यं कवीनां निकेतम् वदन्ति ।
உறைநடை கவிகளுக்கு உறைக்கல் என்று சொல்லுகின்றனர்.  
कादम्बरी रसज्ञानाम् अहारेपि नरोच्छते ।

बानोच्छिष्टं जगत्सर्वम् ।

Shudrakaas question

॥ श्री ॥           लघुकादंबरीसङ्ग्रह:      पूर्वभाग:।
आसीद्विदिशाभिधानायां राजधान्यां राजा सूद्रको नाम ।
விதிஷா என்று ஒரு மாநகரம் இருந்தது, அதை ஆண்டு வந்தான், சூத்திரகா என்ற பெயருடைய ராஜா ஒருவன்.
There was an empire called ‘Vidhisha’, which was ruled by a king named ‘Sudraka’.
एकदा तु काचन कन्यका पञ्जरस्थं शुकमादाय, आस्थानमण्डपगतं राजानसुपसृत्य प्रणनाम ।
ஒரு சமயம், ஒரு பெண், ஒரு கூண்டில் ஒரு கிளியுடன், ஆஸ்தான மண்டபத்தில் இருக்கின்ற அரசன் எதிரில் வந்து, வணங்கி நின்றாள்.
Once, a young woman brought a caged parrot and met the king in his primary court, and stood in front of him saluting.   
"देव ! विदितसकलशास्त्रार्थोऽयं वैशम्पायानो नाम शुक आत्मीय: क्रियताम् " इति । 
"தேவனே, விதிப்படி சகலஸாஸ்திரங்களையும் கற்றரிந்த, வைசம்பாயன என்ற பெயருடைய, இந்தக் கிளியை உங்களுடையது ஆக்கும் காரியத்தைச் செய்கிறேன்", என்று கூறினாள். 
“Lord, let this parrot which has learnt all the Shastraas according to the rules, be made yours” she said.
तदा स विहंगमो राजाभिमुखो भूत्वा, समुन्नमय्य दक्षिणं चरणं, जयशब्दमकरोत् ।
அப்போது அந்தக் கிளி, ராஜாவின் பக்கமாக திரும்பிப் பார்த்து, தன் வலது காலை உயர்த்தி ஜயகோஷம் செய்தது. 
At the same time, the parrot turned towards the king, lifted its right foot and made Jayashabdam to him. 
राजा तु संजातविस्मय:, "आवेदयतु भवानादित:प्रभृति, आत्मनो जन्म । 
ராஜாவோ, ஆச்சரியப்பட்டு, "கூறுவீர்களாக, தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி, தங்கள் பிறப்பிலிருந்தே".
The king was totally surprised and said to the parrot, “though shalt say about your life from thy very birth”. 
कस्मिन् देशे भवान् कथं जात:?का माता?कस्ते पिता
எந்த தேசத்தில் தாங்கள் எப்போது பிறந்தீர்கள்தாய் யார்தங்கள் பிதா யார்
In which country and how were you born?  Who is your mother? And who is your father? 
कथं शास्त्राणां परिचय: कथं पञ्जरबन्ध: अपनयतु भवान् न: कुतूहलम्"  इति पप्रच्छ ॥
எப்படி சாஸ்திரங்களைக் கற்றீர்கள்எப்படி கூட்டுக்குள் அடைபட்டீர்கள்போக்குவீர்களாக, தாங்கள், எங்களுடைய தெரிந்துகொள்ளும் ஆவலை"  என்று கூறினார். 
How did you learn the Shaastras?  How did you get caged?  Though shalt tell us and clear our eagerness to hear”. 

Shabara sainyam


वैशम्पायनस्तु सादरमब्रवीत् - "अस्ति मध्यदेशालङ्कारभूता विन्ध्याटनौ नाम।   भगवतो महामुनेरगस्त्यस्य सरिता गोदावर्या परिगतमाश्रमपदमासीत्।
வைசம்பாயனர் மரியாதையுடன் சொல்லத் தொட்ங்கினார், "மத்திய தேசத்தை அலங்காரப்படுத்துவதாக விந்தியா என்று ஒரு காடு இருந்தது.   அங்கு பகவான் மஹாமுனி அகஸ்தியருடைய ஆசிரமம், கோதாவரி நதியால் சூழப்பட்டு இருந்தது.   
Vaisampayana respectfully narrated thus: There, adorning the middle country, is the forest by name ‘Vindhya’. There is the hermitage of the great sage Agastya, surrounded by the river Godavari.
तस्य च नातिदूरे, अगाघम्, अप्रतिमम्, अस्ति पम्पाभिधानं पद्मसर:। तस्य च पश्चिमे तीरे बभूव महान् जीर्ण: शल्मलीवृक्ष:।
அதிலிருந்து அதிக தூரமில்லாத இடத்தில், அளவற்றதுமான, ஈடு இணையற்றதுமான, பம்பா என்கின்ற தாமரைக்குளம் இருந்தது. அதனுடைய மேற்குக்கரையில் ஒரு பெரிய பட்டுப்போன இலவம்பஞ்சு மரம் இருந்தது.
Not far away is an unfathomable and unparalleled lotus-pond, by name Pampa.   On its western banks stands a huge and decayed silk-cotton tree.   
तत्र च शाखाग्रेषु कोटरोदरेषु स्कन्धसन्धिषु च नानादेशसमागतानि शुकशकुनिकुलानि प्रतिवसन्ति स्म।  एकस्मिंश्च जीर्णकोटरे जायया सह निवसत: पितुरहमेव एक: सूनुरभवम्। जननीच मे प्रसववेदनया लोकान्तरमगमत्।
அதனுடைய கிளைகளின் ஓரங்களிலும், பொந்துகளிலும், கிளை இடுக்குகளிலும், பல தேசங்களிலிருந்தும், இங்கு வந்த கிளிகளும் மற்ற பறவைகளின் குடும்பங்களும், நன்றாக வாழ்ந்து கொண்டிருந்தது. அந்த மரத்தில் பட்டுப்போன ஒரு பொந்தில் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருந்த என் தந்தைக்கு ஒரே மகனாகப் பிறந்தேன்.   என்னைப் பெற்றவளும் கூட பிரசவவேதனையால் மேலுலகத்தை அடைந்தாள்.
There, at the end of the branches, in the hollows and on the splits of the tree branches, lived, many families of parrots and birds, which had congregated from various parts of the country. In one of the decayed hollow, my father lived with his wife and I was born as the only son to them.   One who gave birth to me, reached the higher abode on account of labour pain.   
दु:खितोऽपि तात: सुतस्नेहादन्तर्निगृह्य शोकम्, एकाकि मत्संवर्धनपर एवाभवत्॥  एकदा तु स्पष्ठे जाते प्रत्युषसि, मृगयासक्तस्य महतो जनसमूहस्य क्षोभितकाननं कोलाहलमशृणवम्।  अभिमुखमापतश्च शबरसैन्यमद्राक्षम्।
என் தந்தை துக்கத்தால் பீடிக்கப்பட்டிருந்தாலும், பிள்ளைப்பாசத்தினால் சோகத்தை உள்ளடக்கிக்கொண்டு, என்னை வளர்க்கும் பொருட்டு ஒருவராகவே இருந்தார்.  ஒரு நாள், நன்றாக பொழுது விடிந்த சமயத்தில், வெட்டையாடுபவர்களினுடைய பெருங்கூட்டத்தினுடைய, அந்த கானகத்தையே கலக்கக்கூடிய கோலாகல சப்தத்தைக் கேட்டேன்.  (பின்) வேட்டைக்காரர்கள் கூட்டம் எங்களை நோக்கி வருவதை நான் கண்டேன்.  
Though my father was very much sorrowful, he suppressed his grief due to his fatherly affection for the son, remained alone and was solely engaged in bringing me up.  Once, when the day had broken clearly, I heard a loud and confused noise caused by a multitude of men engaged in hunting, rocking the entire forest.   I then actually saw an army marching towards me.   
तत्रैको जरच्छबर: तं शाल्मलीपादमारुह्य, शुकशाबकानपगतासून् कृत्वा क्षितावपातयत्। तातस्तु पक्षसंपुटे नाच्छाद्य मां किंकर्तव्यतामूढरतस्थौ।  असावपि पाप: कोटरादाकृष्य तातमगतासूमकरोत्; उपरतं च तमवनितले अधोमुखप्रमुच्छत्।  अहमपि तच्चरणान्तराले प्रवेशितशिरोधरस्तेनैव सहापतम्। सावशेषत्वादयुषो मे, नाङ्गान्यशीर्यन्त। मां तु लब्धजीविताशं बलवती पिपासा परवशमकरोत्।
அதில் ஒரு கிழவேடுவன், அந்த இலவம்பஞ்சு மரத்தில் ஏறி, கிளிகளின் குஞ்சுகளை எதுத்து (கொன்று) உயிரற்ற உடல்களாக ஆக்கி, தரையில் எறிந்தான்.   என் தந்தையோ, தன் சிறகுகளால் என்னை மறைத்து, என்ன செய்வது என்றறியாமல் திகைத்து நின்றார்.   பாபியான அவன், பொந்திலிருந்து என் தந்தையை வெளியே இழுத்து (கொன்று) உயிரற்ற உடலாக ஆக்கினான். பின் தலைகீழாக அவரை பூமியிலே எறிந்தான்.  நானும் கூட அவருடைய கால்களுக்கு நடுவில், என் கழுத்தை நுழைத்தவனாக, அவருடனேயே கீழே விழுந்தேன்.   விதிப்படி என் ஆயுசு கெட்டியாக இருந்ததால், என் அங்கங்கள் உடையாமலிருந்தன.   நானொ உயிரின்மேல் பீடிக்கப்பட்ட ஆசையினால், பலமான தாகத்தால் கலங்கிப்போயிருந்தேன்.   
An old hunter amongst them ascended the silk-cotton tree and killed the young ones of the parrots and threw them on the ground.   covering me with his wings, my father stood stunned, not knowing what to do.  That sinned hunter drew my father from out of the hollow, made him a lifeless body and dropped him to the ground, upside down.  I too, entered with my neck between his legs, fell on the ground.  With my destiny to live longer, my limbs did not break up.  I possessed by the desire to live, was overpowered by a terrible thirst was agitated.  

Jabali's comment

अत्रान्तरे सरसो नातिदूरवर्तिनि तपोवने प्रतिवतन् हारीतनामा जाबालेस्तरय:, तदेव कमलसर: सिष्णासुरुपागमत् । स च मां तदवस्थमालोक्य समुपाजातदय:, अङ्गुल्या कतिचित्सलिलबिन्दुनापातयत् । अभिषेकावसाने च मां गृहीत्वा तपोवनाभिमुखं शनैरगच्छत् ॥
அந்த சமயத்திலே, அந்த ஏறியிலிருந்து அதிக தூரமில்லாத இடத்தில் இருக்கின்ற, தபோவனத்தில் வசித்த ஹரிதா என்ற பெயருடைய ஜாபாலியின் மகன், அதே தாமரைக் குளத்துக்கு, கால கர்மங்களை முடிப்பதற்கு வந்தார்.  அவரும் என்னுடைய அவஸ்தைகளைப் பார்த்துவிட்டு, என் மேல் தயை கொண்டு, என்னை எடுத்துச் சென்று, விரல்களினால் சிறிது தண்ணீர் எடுத்து ஊற்றினார்.  குளித்து முடித்து விட்டு என்னை எடுத்துக் கொண்டு தபோவனத்தை நோக்கி மெதுவாகச் சென்றார்.   
In the meantime, Haritha son of Jabali who lived not far away from the lake came to the same lotus pond for his daily rituals.  On seeing me in such misery, he took mercy on me, took me to the bank of the lake and made me drink a few drops of water through his fingers.  After the bath, he took me along and went slowly towards his hermitage.
गत्वा च मामेकदेशे स्थापयित्वा, हरित: पितु: पादावुपगृह्य अनतसमीपवर्तिनि कुशासने सनुपाविशत्।  किंचिदुपजातकुतूहलो जाबालिर्मामतिप्रशान्तया दृशा दृष्ट्वा "स्वस्यैवाविनयस्य फलमनेनानुभूयते" इत्योवाचत्।  
சென்றவுடன், என்னை ஒரு இடத்தில் இருத்தி, ஹரிதன் தந்தையின் காலைத்தொட்டுவிட்டு, வெகு அருகில் இல்லாமல்(சற்று தள்ளி) தற்பைப்புல் பாயில் அமரிந்தார்.  சிறிது பொங்கிவரும் ஆச்சரியத்தால் ஜாபாலி, என்னை மிகவும் சாந்தமாக பார்த்துவிட்டு, "தன்னுடைய வினயமில்லாத செயலினால் வந்த பயனை இவன் அனுபவிக்கிறான்" என்று கூறினார்.   
Reaching it, Harita placed me in a corner, touched the feet of his father and sat on a Darbha seat, not too very close.  Jabali having grown a little curious, looked at me with calm dignity and said, “The fruit of his own immodesty is being tasted by him,”
"भगवन्!  कीदृशोऽनेन अविनय: कृत:? क वा कृत:? जन्मान्तरे वा कोऽयमासीत्?" इत्युपच्यमानस्तपोषनपरिषदा स महामुनि: प्रत्यवदत्॥
"பகவனேஇவன் எவ்விதமான வினயமில்லாத செயலைப்புரிந்தான்இவன் என்ன செய்தான்முன் ஜன்மத்திலா, எதற்காக இவன் செய்தான்?  என்று அங்கு கூடியிருந்த தவத்தில்சிறந்தவர்கள் கேட்டதன் பொருட்டு அந்த மஹாமுனி பதில் கூறினார்.  
That great sage who was requested by the assemblage of hermits with the questions, ‘revered sir, what kind of immodesty was committed by the bird?  When and what for was it commited? Replied thus” 

Thursday, August 8, 2013

birth of Vaisampayana

"अस्ति सकलत्त्रिभुवनललामभूता, अवन्तिषु उज्जयिनी नाम नगरी।  तस्यां च नलनहुषदशरथप्रतिम: परिहृतप्रजापीडस्तारापीडो नाम राजाभूत्।
மூன்று லோகத்திலும், எல்லா மேன்மையும் பொருந்திய பூஷணமாக விளங்கி இருந்தது, அவந்தி தேசத்தில் உள்ள உஜ்ஜயினி என்ற பெயருடைய நகரம்.  அந்த நகரத்தில், நள, நகுஷ, தசரத அரசர்களுக்கு சமமான, ஜனங்களுடைய கஷ்டங்களைப் போக்க கூடிய, தாராபீடன் என்ற பெயருடைய மன்னன ஆண்டு வந்தான்.     
“in the country of Avanthi, there is the famous city of Ujjaini, an ornament unto the triad of worlds.  There ruled over that country the famous king tarapida, equal to Nala, Nahusha and Dasaratha, by whom all his subjects had been freed of oppressions.   
तस्य च राज्ञ: सर्वकार्येष्वाहितमतिरमात्यो ब्राह्मण: शुकनासां नामासीत्।   अथ तस्य सकलान्त:पुरप्रधानभूता महिषी विलासवतीनामाभूत्।
அவருடைய அரசவையில், எல்லா காரியங்களிலும் தன் மதியை உபயோகித்து விஷயம் அறியவல்லவரான, சுகநாஸம் என்ற பெயருடைய அந்தணர் இருந்தார்.  மேலும் அந்த அரசனுக்கு, அந்தப்புரத்தில் எல்லோரிலும் முக்கியமான மகிஷியாக, விலாஸவதி என்ற அரசி இருந்தாள்.   
His minister was the reputed Sukanasa, a brahmin, whose keen intellect was directed effectively in all affairs.   He had a famous queen, the chief amongst his concerts, Vilasavathi by name.   
राजा च सुतमुखदुर्शनसुखं न लेभे।  यथा यथा च यौवनमतिचक्राम, तथा तथा अनपत्यताजन्म अवर्धतास्य संताप:॥
ராஜாவோ மகனின் முகதரிசனசுகம் என்ன என்று அறியாமலிருந்தார்.  எப்படி எப்படி யௌவனமானது கழிந்து கொண்டிருந்ததோ, அப்படி அப்படியே குழந்தையின்மைத்தன்மையினால் உண்டான கவலையும் அதிகரித்தது.   
The king did not enjoy the pleasure of seeing the lovely face of his son.  Even as his youth was wanning, his grief over his childlessness was waxing.   
एवं च गच्छति काले, कदाचिद्राजा क्षीणभूयिष्ठायां रजन्यां, स्वप्ने विलासवत्या: आनेन शशिनं प्रविशन्तमद्राक्षीत्। प्रबुद्धश्चोत्थाय, तस्मिनेव क्षणे समाहूय शुकनासम्, तस्मै तं स्वप्नमकधयत्। स तं समुपजातहष: "देव, संपन्ना: सुचिरादस्माकं प्रजानां च मनोरथा:।"      
இப்படியாக காலம் போன போது, ஒரு சமயம் ராஜா, இருள் அதிகமாக பரவியிருந்த ராத்திரியில், ஸ்வப்னத்தில், விலாசவதி முகத்தில் சந்திரனானது நுழைவதுபோல் கண்டார்.    தூக்கத்திலிருந்து முழித்து, படுக்கையிலிருந்து எழுந்து, அந்த க்ஷணமே சுகநாஸரை அழைத்து, அவரிடத்தில் அந்த ஸ்வப்னத்தைப்பற்றி கூறினார்.  அதைக் கேட்டு அவர் சந்தோஷம் அடைந்தவராக, "தேவனே, வெகு சீக்கிரமாக, நம்முடைய, மற்றும் ஜனங்களுடைய ஆசை நிறைவேறப்போகின்றது.
As time rolled on thus, once when the night had almost run out, the king saw in a dream the moon entering into the face of his wife, Vilasavathi.  He woke up immediately, called in Sukanasa and narrated the entire dream to him.   The minister who was delighted said thus, “my lord, the desire of mine and our subjects has at long last been fulfilled.“  
अद्य खलु मयापि निशि स्वप्ने दिव्याकृतिना द्विजेन विकचं पुण्डरीकमुत्सङ्गे मत्पणयिन्या: मनोरमाया: निहितं दृष्टम् ।  आवेदयन्ति हि प्रत्यासन्नमानन्दमग्रपातीनि शुभानि निमित्तानि" इति प्रत्युवाच ॥
இன்றைக்கு அல்லவா, என்னாலும் கூட ராத்திரியில் ஸ்வப்னத்தில், ஒரு திவ்யமான உருவத்தையுடைய பிராமணம் ஒருவன், மலர்ந்த தாமரையை, என்னுடைய பிரியமான மனோரமாவின் மடியில் வைத்ததைப் பார்த்தேன்.  அடுத்து அடுத்து வரக்கூடிய சுப (நிமித்தங்கள்) சகுனங்கள், சந்தோஷமானது அருகில் வருவதைப் போல இருக்கின்றது" என்று கூறினார். 
I too dreamt a dream this night wherein a full-blown lotus was placed on the lap of my beloved spouse, manorama, by a brahmin of celestial form.  Preceeding good omens do foretell the imminent happiness.   
कितिपयदिवसापगमे च देवताप्रसादाद्विवेश गर्भो विलासवतीम्। तत: क्रमेण पुण्येऽहनि, प्रशस्तायां वेलायाम्, विलासवती सुतमसूत । तदैव शुकनासस्यापि तनयो जात:। अतिक्रान्ते च षष्ठीजागरे, प्राप्ते दशमेऽहनि, पुण्ये मुहूर्ते, राजा स्वसूनो: स्वप्नानुरूपमेव चन्द्रापीड: इति नाम चकार। अपरेद्यु: शुकनासोऽपि आत्मजस्य विप्रजनोचितं वैशम्पायन: इति नाम चक्रे॥
சில நாட்களுக்குப் பிறகு, தேவனுடைய அனுக்கிரகத்தினால், கர்பமானது விலாஸவதியினுள் சென்றது.  பிறகு முறையாக, புண்ணியமான தினத்தில், நல்ல சிறந்த நேரத்தில், விலாசவதி புத்திரனைப் பெற்றெடுத்தாள்.  அப்பொழுதே, சுகநாஸருக்கும் ஒரு மகன் பிறந்தான்.   ஆறு ஜாகரம் கழிந்த போது, பத்தாவது நாள் வந்த போதுபுண்ணியமான முகூர்த்த காலத்தில், ராஜா தன் மகனுக்கு, ஸ்வப்பனத்திற்கு ஏற்றார்ப்போல, சந்திரபீடா என்று பெயரிட்டார்.    மறுநாள், சுகனாஸரும் தன்னுடைய புத்திரனுக்கு, பிராம்மணஜனத்திற்கு உசிதமான பெயராக, வைசம்பாயனா, என்று பெயரிட்டார்.
After a few days, Vilasavathi became pregnant  by god’s grace.  In due course, Vilasavathi gave birth to a son on an auspicious day.  At the same time a son was born to Sukanasa also.   When the sixth night of vigil passed off and the tenth day came, the king named his son ‘Chandrapida’ at an auspicious hour, in keeping with the dream.   The next day, Sukanasa too named his son, ‘Vaisampayana’   

Education of Chandrapida

तारापीड: क्रीडाव्यासङ्गविधातार्थं बहिर्नगराद्विद्यामन्दिरमकारयत्। अखिलविद्यापादानार्थमाचार्येभ्यश्चन्द्रपीडं शोभने दिवसे वैशम्पायनद्वितीयमर्पयांबभूव।  चन्द्रपीडोऽप्यनन्यहृदयतया अचिरेणैव कालेन सर्वा विद्या जग्राह। वैशम्पायनोऽपि सर्वाभिस्तमनुचकार ।
தாராபீடா, சதா காலமும் விளையாடிக்கொண்டிருப்பதைத் தடுப்பதற்கு, நகரத்திற்கு வெளியே ஒரு கல்வி கற்கும் ஆலயத்தைக் கட்டினார்.  எல்லா வித்தியைகளையும், கற்றுக் கொள்வதற்காக, பல உபாத்தியாயர்களை அமர்த்தி, ஒரு நல்ல நாளில், வைசம்பாயனரோடு கூட இரண்டாகச் சேர்த்து, ஆசாரியர்களிடத்தில் அர்பணம் செய்துவிட்டார்.  சந்திராபீடா வேறு எதிலும் மனதைச்செலுத்தாமல், மிகக்குறுகிய காலத்தில், எல்லா வித்தியைகளையும் கிரகித்துக்கொண்டார்.   வைசம்பாயனனும் கூட, எல்லா வித்தியைகளிலும் அவரைப்பின் தொடர்ந்து கற்றார்.   
Tarapida caused a school to be erected outside the city so as to put an end to over-attachment to play etc.,   On an auspicious day, he handed over his son accompanied by Vaisampayana, to the teachers, for the acquisition of knowledge in various branches of study.   Chandrapida learnt all the subjects very quickly, dut to perfect concentration.   And Vaisampayana emulated him in the study of all arts and sciences.
एवं च अधीताशेषविद्यं समारूढयौवनारभ्भं चन्द्रपीडमानेतुं बलाधिकृतं बलाहकनामानं तारापीड: प्राहिणोत्।  स गत्वा विद्यागृहम्, उपसृत्य चन्द्रपीडं, दर्शितविनयो विजिज्ञपत् - "कुमार! महाराज: समाज्ञापयति - पूर्णो: नो मनोरथा:। अनुमतोऽसि निर्गमाय विद्यागृहात्सर्वाचार्यै:।  उपगृहीतशिक्षं पौर्णमासीशशिनामिव नवोद्गतं पश्यतु त्वां जन: इति।
இப்படியாக, எல்லா விதமான வித்தியைகளையும் கற்றுக்கொண்டவராகவும், யௌவன பருவத்தை அடைந்த அந்த சந்திராபீடாவை அழைத்து வருவதற்கு, பலம்பொருந்தியவனான பலாஹக என்ற பெயருடையவனை, தாராபீடா அனுப்பினார்.  அவர் கல்வி ஆலயத்தை அடைந்து, தாராபீடா அதுகில் வந்து, வினயத்தைக்காண்பித்தவராக, சொன்னார். "குமாரனே!  மஹாராஜா இதை உங்களுக்கு கூறச் சொன்னார் - "எங்களுடைய ஆசை பூர்த்தியாகிவிட்டது". சர்வ ஆச்சார்யர்களாலும் வித்தியாலயத்திலிருந்து செல்வதற்கு அனுமதிக்கப்பட்டவனாக இருக்கிறாய்.  பூர்ணமாக இருக்கக்கூடிய பௌர்ணமி சந்திரனைப்போன்ற, புதிதாக வித்தியைகளைக் கற்றவனான உன்னை, ஜனங்கள் யாவரும் பார்க்கட்டும்.      
Tarapida then sent Balahaka, a military officer, to bring Chandrapida who had by then mastered all branches of study and on whom youth had set its foot.   He went to the school, approached Chandrapida in all reverence and submitted thus:  “Oh Prince, your revered father commands thus: “Our ambitions have been fulfulled.  You have been permitted by the teachers to leave the school.    Let the subjects see you who have been educated, even as they would see the newly risen moon on the full moon day. 
महाराजेन प्रेषित: इन्द्रायुधनामातुरंगमो द्वारि तिष्ठति। एष:खलु देवस्य पारसीकाधिपतिना जलधिजलादुत्थितमयोनिजमिदमश्वरत्नम् इति संदिश्य प्रहित:। तदयमनुगृह्यतामधिरोहणेन" इति ॥   
மஹாராஜாவால் அனுப்பப்பட்ட இந்திராயுதன் என்ற பெயருடைய குதிரை வாசலில் இருக்கின்றது.  இதுவோ, பாரஸீக அதிபதியால் இவ்வாறாக சொல்லி அனுப்பப்பட்டது."சமுத்திர ஜலத்திலிருந்து வந்தது, யோனியிலிருந்து பிறக்காமல் தானாகவே உற்பத்தியானது, இந்த குதிரைகளில் ரத்தினம்."  ஆகவே நீ இதன் மேலேறி, இந்த இந்திராயுதமானது உன்னால் அனுக்கிரகிக்கப்படட்டும்.   
The horse Indrayudha by name, sent by your father is waiting at the door.   It was sent to your father by the ruler of Persia with the message that it was a gem of a horse, risen from the waters of ocean and not born of any womb.  Hence let it be honoured by your mounting.